41 உறுப்பு கல்லூரிகள் தற்பொழுது அரசு கல்லுரியாக மற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு, அந்த 2018-2019-ம் கல்வியாண்டில் தமிழக அரசுடைய உயர்கல்வித்துறை கீழ் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்கள் நேரடியாக உறுப்பு கல்லூரியாக இருக்கக்கூடிய 41 உறுப்பு கல்லூரிகளை ரூ. 152 கோடி செலவில் அதை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றிய தினம் நீதிநிலை காரணமாக இந்த முடிவுகள் கைவிடப்பட்டன. தொடர்ச்சியாக இது தொடர்பாக நீதிநிலையை சீரமைக்கும் மாரு பல்வேறு கடிதங்களும் எழுதப்பட்டன. மேலும் இதில் 238 பணியிடங்கள் இன்று அதற்கான வில்லை என்பது சுமார் ரூ.4,53,57,000 சம்பளமானது தொடர்ச்சியாக ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் என்று வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக ரூ. 58,64,14,000 என்று ஒவ்வெரு ஆண்டும் இந்த செலவினங்கள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தனியாக ஒரு அரசு கல்லூரி என்றபோது அதற்கான சுய நீதிதிரட்டல், நீதிநிலையை சீராக்குதல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த அடிப்படையில் தற்பொழுது 41 கலை அறிவியல் கல்லூரிகளிலும், உறுப்பு கல்லுரியாக இருந்த கல்லூரிகளிலும் தற்பொழுது கலை அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த கல்லூரிகளில் விதிமுறைகளாக பணியாற்றியவர்களுக்கான சம்பளம் எப்படி குடுப்பது, அதையைப்போல அந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது என்பது தொடர்பாக ஒரு பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே அவற்றை பின்பன்றி வரும் களங்களில் முழுமையான செயல்படுத்துவதற்கான ஒரு விரிவான உத்தரவை பிறப்பிக்கப்படும் என்று உயர்கல்விதுறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுருக்கிறது
No comments:
Post a Comment