மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு செப்.21 முதல் இலவச பயிற்சி தொடக்கம்: பட்டதாரிகள் முன்பதிவு செய்து வகுப்பில் பங்கேற்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/09/2022

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு செப்.21 முதல் இலவச பயிற்சி தொடக்கம்: பட்டதாரிகள் முன்பதிவு செய்து வகுப்பில் பங்கேற்கலாம்

 866922

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்க உள்ள பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கு செப்.21-ம் தேதி முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இந்நிலையில், சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் அத்தேர்வுக்கான இலவச பயிற்சி செப்.21-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.


இத்தேர்வுக்கான கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டத்தில் உள்ள பிரிவுகளுக்கான வகுப்புகளும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.


விருப்பம் உள்ளவர்கள், 9597557913 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தங்களது பெயர், கல்வித் தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பெயரை பதிவு செய்து விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரியிலும் peeochn@gmail.com தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459