இந்த கல்வியாண்டு முதல் கியூட் (cute) என்ற பொது நுழைவுத் தேர்வு மூலமாக, ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 44 ஒன்றிய பல்கலைக் கழகங்கள், 12 மாநில பல்கலைக் கழகங்கள் உட்பட மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் இந்த தேர்வு மூலமே சேர்க்கை நடத்தப்படுகிறது. இளங்கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள், கடந்த ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடந்தது.
இந்நிலையில் பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இளங்கலை பல்கலைக் கழக தகுதி தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அல்லது முடிந்தால், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிக்கும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment