தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் - 1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பி.எட் படித்து முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம்
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
விண்ணப்பம்
இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் தாளுக்கு 2,30,878 பேர் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என 6,32,764 என மொத்தம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம்
இதனனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் 25 தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.
தேதி மாற்றம்
ஆனால் நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டது. அதன்படி, தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் தேர்வர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment