Install செய்யும் போது permission allow கொடுக்கவில்லை எனில் mobile settings கிளிக் செய்து
settings ➡️
Apps or
App Managaement or
manage app ➡️
TNSED school ➡️
permission என்பதில் இரண்டு permission Location and media and storage or storage allow செய்திருக்க வேண்டும். Deny என்பது இருக்க கூடாது.
குறிப்பு : App uninstall செய்து பின் install செய்தாலும் இந்த settings சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தாங்கள் பயன்படுத்தும் மொபைலில் Internal storage full என்று இருக்க கூடாது. Internal storage full என்று வந்தால் தங்களது மொபைலில் பயன்படுத்தாத app uninstall செய்து விடவும்.
EMIS இணையதளத்தில் அனைத்து வகுப்பிற்கும் வகுப்பாசிரியர் assign செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சம்பந்தபட்ட வகுப்புகளில் அல்லது பிரிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கை "0" எனில் EMIS website- ல் சம்பந்தபட்ட வகுப்பை அல்லது பிரிவை delete செய்ய வேண்டும். Delete செய்யவில்லை எனில் தங்களது பள்ளி "Partially marked" பிரிவில் வரும்.
Today's status : School login ( Udise code login) - ல் தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.
ஆசிரியர் வருகை : School login ( Udise code login) - ல் தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்கள் வருகை பதிவு : சம்பந்தபட்ட வகுப்பு ஆசிரியர் அந்த வகுபிற்கான login- ல் மட்டுமே ( Class Teacher login ID and Password only) பதிவு மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் வருகை பதிவை school udise code login- ல் பதிவு மேற்கொள்ள கூடாது.(Except class teacher absent)
mobile settings கிளிக் செய்து settings ➡️ Apps or App Managaement or manage app ➡️ TNSED school ➡️ permission allow செய்த பின் Mobile location ON செய்து வைத்திருக்க வேண்டும்.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு செய்த பின் Save and Sync என்ற icon Orange அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் போது தாங்கள் செய்த பதிவுகளை மாற்ற இயலாது.
பள்ளிகளில் School login ல் தலைமை ஆசிரியர் அனைத்து வகுப்பிற்கும் பச்சை நிறம் அனைத்து வகுப்பிற்கும் வந்து விட்டதா என்பதை உறுதி செய்யும் போது ஒரு சில வகுப்புகளுக்கு பச்சை நிறம் மாறாமல் வெள்ளை நிறம் வருகிறது என்பதால் சமந்தப்பட்ட வகுப்பு ஆசிரியரின் வருகை பதிவு செயலியை log out செய்து பின் மீண்டும் பதிவு மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
அன்றைய தினத்திற்கான வருகையை ஒரு முறை பதிவு செய்து save and sync என்பது orange நிறத்தில் இருந்து saved locally என்று செய்தி தோன்றினால் உடனே log out செய்ய கூடாது. இது போன்று ஒரு முறை பதிவு செய்த பின் log out செய்து log in செய்வதால் தங்களது வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை விட குறைவான எண்ணிகை திரையில் தோன்றும்.
இந்த பிழையை mobile. App ல் அன்றைய தினத்திற்கான தேதி முடிந்து அடுத்த நாள் தேதி மாறும் வரை தாங்கள் எந்த மொபைல் - ல் முயற்சி செய்தாலும் அந்த வகுப்பிற்கான தவறான மாணவர்கள் எண்ணிக்கை மாற்ற இயலாது.ஒரு முறை save and sync என்பது பச்சை நிறத்தில் வந்து விட்டால் எந்த மொபைலில் log in செய்து முயற்சி செய்தாலும் மாற்ற இயலாது.
Save and sync orange நிறத்தில் இருந்தால் log out செய்யாமல் மதியம் 12 மணிக்கு பின் தங்கள்து மொபைலில் flight mode ON செய்து 30 வினாடிக்கு பின் Flight mode off செய்து save and sync கிளிக் செய்தால் பச்சை நிறத்தில் காணப்படும். Network குறைவான பகுதிகளில் உள்ளவர்கள் network நன்கு கிடைக்கும் பகுதிக்கு வந்த பின் கிளிக் செய்து கொள்ளலாம்.
அன்றைய தினத்திற்கான வருகையை ஒரு முறை பதிவு செய்து save and sync என்பது orange நிறத்தில் இருந்து saved locally என்று செய்தி தோன்றி உடனே log out செய்து தங்களது வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை விட குறைவாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை அன்றைய நாளில் சரி செய்ய அல்லது மாற்ற இயலாது. அடுத்த நாள் காலை app log out and log in செய்து *students list* என்பதை sync செய்தால் மட்டுமே சரியான மாணவர்கள் எண்ணிக்கை வரும்.
No comments:
Post a Comment