தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5 உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 21.09.2022 அன்று வரை இணைய வழி மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு முறைப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.
விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறைப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல.
விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தைத் தனியே செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு முறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவிகளின் பெயர் Junior Assistant or Assistant
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 161
அறிவிப்பு வெளியான தேதி 23.08.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 21.09.2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள் மற்றும் நேரம் :
அறிவிக்கை நாள் 23.08.2022
இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் 21.09.2022
இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் 26.09.2022 நள்ளிரவு 12.01 முதல் - 28.09.2022 இரவு 11.59 வரை
நியமன அலுவலரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் தடையின்மைச் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 06.12.2022
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் :
தாள்-1 பொதுத் தமிழ் 18.12.2022 காலை 9.30 மு. ப. முதல் 12.30 பி. ப. வரை
தாள்-1 பொது ஆங்கிலம் 18.12.2022 மாலை 2.00 பி. ப முதல் 5.00 பி. ப. வரை
காலிப்பணியிடம் பற்றிய விவரங்கள்
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் (தனித்தனியே ஒவ்வொரு பதவிக்கும் பொருந்தும்) தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
ஏற்கனவே விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களைச் சரிபார்த்த பின்னர் அசல் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பொருட்டு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவர், பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
எழுத்துத் தேர்வு சென்னை (0101) தேர்வு மையத்தில் மட்டுமே நடைபெறும்.
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கும் / சான்றிதழ் சரிபார்ப்புக்கும் / கலந்தாய்விற்கும் தங்களது சொந்த செலவில் தேர்வு மையம் / தேர்வாணையத்திற்கு வரவேண்டும்.
குற்றவியல் வழக்குகள் / ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான உறுதிமொழி: i. விண்ணப்பதாரருக்கு எதிராக தொடங்கப்பட்ட / நிலுவையில்லுள்ள அல்லது முடிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் / குற்றவியல் நடவடிக்கைகள், கைது, விடுவிப்பு. ஏதேனும் இருப்பின் அந்த தகவல்களைத் தேர்வாணையத்திற்கு இணைய வழி விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும்போது தெரிவித்தல் வேண்டும்.
வயதுத் தகுதி , பாடத்திட்டம் மற்றும் இதர பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த பக்கத்தில் சென்று காணவும்.
அறிவிப்பினை காண
இந்த தளங்களை காணலாம்
No comments:
Post a Comment