தமிழக அரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலர் 274; இளநிலை உதவியாளர் 3,593, தட்டச்சர் 2,108; சுருக்கெழுத்தர் 1,024 உள்ளிட்ட, 7,301 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 4 தேர்வு, ஜூலை 24ல் நடத்தப்பட்டது.
மாநிலம் முழுதும், 7,689 மையங்களில், 18.50 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை நவம்பரில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், குரூப் - 4 தேர்வு வினாத்தாளுக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.இந்த விடைக்குறிப்பில், தவறுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 8ம் தேதி, மாலை 5:45 மணிக்குள், மனுக்களை அளிக்கலாம்.
எந்த வினாவுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனை உள்ளது என்பதை, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக்கொண்டுள்ள புத்தக ஆதாரங்களுடன், www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியாக, தேர்வர்கள் மனு அனுப்ப வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.வல்லுனர் குழுவின் முன் ஆட்சேபனைகள் வைக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி செய்யப் பட்ட விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, ஆட்களை தேர்வு செய்த பின் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment