உன்னால் முடிகிறது ?
(எண்ணும்எழுத்தும்)
என்
இரவுப் பொழுதைக்
களவாடிக் கொண்டாய்...
என்னுடைய
ஆசிரியர் பயிற்சி
நினைவுகளை-மீண்டும்
அசைபோடவைத்தாய்....
என்
வகுப்பறைக்குள்-#youtube இன்
வழியாக பல கண்களை
எட்டிப் பார்க்க வைத்தாய்...
என் (மாணவ)
குழந்தைகளின் மகிழ்ச்சியான
கற்றல் கடலில்-என்னை
கலந்துவிட்டாய்....
என்னுடைய
ஒவ்வொரு விடியலையும்
புத்தம்புது விடியலாக
மாற்றியுள்ளாய்....
என்
கணவரையும்
மாற்றிவிட்டாய்..
வெங்காயம் மட்டுமே
வெட்டி உதவியவரை
#chart ஐ
வெட்ட வைத்துவிட்டாய்...
என்
இரு மகன்களின் மனதில்
ஓர் அடி
உயர்த்திவிட்டாய்...
என்
வகுப்பு குழந்தைகளின்
பெற்றோர்களையும்
குழந்தையாக மாற்றி
என்னுடனே
பயணிக்க வைத்துவிட்டாய்...
என்னைத்
தேர்ந்தெடுத்து
குப்பைப் பொறுக்கும்
குப்பைப் பொறுக்கியாக
மாற்றிவிட்டாய்....
என்னை
சிறகில்லாமல்
சிறகடிக்க
வைத்துவிட்டாய்...
இக்குழுவில் வரும்
பாராட்டைப் பார்க்கும்போது..
என்னே ! பெரிதாக
தொடக்கநிலையில்
சொல்லிக் கொடுத்துவிடப் போகிறார்கள் என்ற
எண்ணத்தை
உடைத்துவிட்டாய்...
எங்கள் அனைவரையும்
#silent_mode ஆக
இருந்தவர்களை
#Activity_mode ஆக
மாற்றிவிட்டாய்....
குறுகிய காலமே
நமது பந்தம்-ஆனால்
பெரிய பெரிய
மாற்றங்களை
நிகழ்த்திவிட்டாய்....
தமிழக குழந்தைகளின்
உள்ளார்ந்த திறன்களை
வெளிக்கொணர்ந்துவிட்டாய்...
கவிதையை ரசிக்க மட்டுமேத்
தெரிந்த- என்னை
கவிதை-எழுத
வைத்துவிட்டாய்...
என்னையும்- ஒரு
குழந்தையாகவே
மாற்றிவிட்டாய்...
இக்கவிதையின்
உணர்வுகளை
#EE ஆல் திளைப்பவர்களால்
மட்டுமே
உணரமுடியும் என்பதை
உணர வைத்துவிட்டாய்...
#மீண்டும்_கேட்கிறேன்.....
எப்படி-உன்னால்
உணணரமுடிகிறது..(#EE)
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் வாசித்து பாராட்டி நமது வாட்சப்குழுவில் பகிர்ந்த கவிதை...
கவிதை படைப்பு
ஆ.உஷாதேவி,இ.நி.ஆ
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி
மறியல்
தஞ்சாவூர் ஊரகம்
தஞ்சாவூர் மாவட்டம்.
எழுதிய ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
No comments:
Post a Comment