இதன்படி, இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, இந்த ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.விண்ணப்பித்தவர்களில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தகுதிக்கான, முதல் தாள் தேர்வு, வரும் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.பின், நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு, அடுத்த மாதம் 10 முதல், 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானது.தேர்வு தேதி மாற்றத்தால், ஆசிரியர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர். ஏனெனில், அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், அடுத்த மாதம் 11ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான அறிவிப்பு, மே மாதமே வெளியாகி விட்டதால், ஏராளமான பட்டதாரிகள், ஆசிரியர் தகுதி தேர்வு மட்டுமின்றி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இரு தேர்வுகளையும் ஒரே காலகட்டத்தில் நடத்தினால், ஏதாவது ஒரு தேர்வை எழுத முடியாத நிலை ஏற்படும். மேலும், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பதாரர்கள் பல மாதங்களாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.எனவே, ஆசிரியர் தகுதி தேர்வு தேதியை, வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment