விரிவுரையாளர் தேர்வில் முதன்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.
அதேசமயம் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலத்தவர் தமிழக தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-யில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment