அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/08/2022

அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக உயர்கல்வி துறை உத்தரவுப்படி, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், தங்களின் இணையதளத்தில், தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளன. இணையதள வசதியில்லாத கல்லுாரிகள், தங்கள் அறிவிப்பு பலகையில், தரவரிசை பட்டியலை ஒட்டியுள்ளன.சென்னை மாநில கல்லுாரி, பாரதி மகளிர் கல்லுாரி உட்பட, சில அரசு கலைக் கல்லுாரிகள் நேற்று வரை தரவரிசை பட்டியலை, இணையதளத்தில் வெளியிடவில்லை. சென்னையில் உள்ள ராணிமேரி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், 24 வகையான இளநிலை படிப்புகளுக்கு, 2,000 இடங்கள் உள்ளன. ஆனால், தரவரிசை பட்டியலில் 46 ஆயிரம் பேர் இடம் பிடித்துஉள்ளனர். பி.ஏ., தமிழில் சேர, 3,121 பேர்; ஆங்கிலத்துக்கு, 2,649 பேர்; மேம்பட்ட தமிழுக்கு 36 பேர்; மேம்பட்ட ஆங்கிலத்துக்கு நான்கு பேர் மட்டும் விண்ணப்பித்துள்ளனர்.கார்பரேட் செக்ரட்ரிஷிப் சேர, 3,175 பேர்; கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லாத மற்ற கணினிசார் பாடப் பிரிவுகளில் சேர, 6,571 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேதியியல் படிக்க, 2,516 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு

அனைத்து கல்லுாரிகளிலும் விண்ணப்பித்த மாணவ - மாணவியருக்கு, அவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்ணில், 'கட் ஆப்' மற்றும் தரவரிசையின்படி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இதில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459