திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: உழவு
குறள் : 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
பொருள்:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
பழமொழி :
Strength grows stronger by being tied.
ஒரு சேரக் கட்டினால் ஒன்பது யானை பலம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்
பொன்மொழி :
எப்போதும் நீங்கள் நேற்றை
பற்றியே சிந்திப்பீர்கள் என்றால்
உங்களுக்கு நாளை சிறப்பாக
இருக்காது..!
பொது அறிவு :
1.தேசிய கீதம் பாட ஒதுக்கப்பட்ட நேரம் எவ்வளவு?
52 செகண்டுகள்.
2.தேசிய விளையாட்டு தினம் எப்போது?
ஆகஸ்ட் 29.
English words & meanings :
Vali-da-tion - checking or proving the validity or accuracy of something. Noun. ஒரு காரியத்தின் உண்மை தன்மை சரிபார்த்தல். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
தயிரிலிருந்து தயாரிக்கப்படும் குறைந்த கொழுப்புள்ள தயிரில் (Yogurt) அயோடின் சத்து நிறைந்துள்ளது. எனவே தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம்
NMMS Q 45:
Water : Pipe :: Blood : _________. Ans : Artery
ஆகஸ்ட் 22 இன்று
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்[1].[2] இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.
கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
நீதிக்கதை
எல்லாம் விதியின்படிதான் நடக்கும்
ஒரு நாள் எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான். மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள். ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை!! எமதர்மன் சொன்னான். நல்லது, இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது. மனிதன் சரி, நீங்கள் இருக்கையில் உட்காருங்கள். நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு காபி சாப்பிட்டு விட்டு போகலாம்.
அதற்கு எமதர்மன் சரி, அப்படியே செய்யலாம் என்றார். அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த காபி கொடுத்தான். குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான். மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு, கடைசியில் கொண்டு எழுதி வைத்தான்.
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான். நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய், அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்
. என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல், பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான்.
நீதி :
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட, எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.
இன்றைய செய்திகள் - 22.08.22
* சென்னையில் 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகளில் சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
* தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
* விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் அகழாய்வில் வீட்டின் திண்ணை பகுதி கண்டுபிடிப்பு.
* மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலுத்திய மாநிலங்கள் - நிலுவை ரூ.1,037 கோடியாக குறைந்தது.
* இமாச்சலப் பிரதேச வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு.
* ரஷ்ய படைகளை எதிர்கொள்வதற்காக, உக்ரைனுக்கு மேலும் 77.5 கோடி டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாட உதவிகளை அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
* 14-வது ஆசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சீன தைபேயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு கிவிடோவா முன்னேற்றம்.
Today's Headlines
* The Metro Rail Corporation plans to install solar power systems on the elevated track, metro stations and workshops to generate electricity in the Phase 2 Metro Rail Project in Chennai.
*
The Minister of Health has said that he is going to meet the Union Minister and urge him to start new medical colleges in six districts of Tamil Nadu.
* Excavation of house paddy field in Vijayakarisalkulam, Virudhunagar district.
* States that have paid Rs 4,000 crore to power generation companies - balance reduced to Rs 1,037 crore.
* 22 killed in Himachal Pradesh floods, landslides
* The United States has announced an additional $775 million in military logistics aid to Ukraine to counter Russian forces.
* India beat Chinese Taipei to enter the semi-finals of the 14th Asian Junior Football Championship.
* Cincinnati Open Tennis: Kvitova advances to final.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment