தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சமச்சீர் கல்வி பாட திட்டம் அமலில் உள்ளது. இந்த பாட திட்டத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்று பருவ தேர்வு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் பருவ தேர்வும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும் செப்., 23ல் துவங்க உள்ளது. இதற்கு முன், மாணவர்களை தயார்படுத்தும் வகையில், அலகு தேர்வு என்ற பெயரில், முன் பருவ தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வுகளை, இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள், மாவட்ட அளவில் பொது தேர்வு போல நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இந்த தேர்வின் மதிப்பெண்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு அடுத்தகட்டமாக கற்பித்தல் முறையை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment