திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: உழவு
குறள்: 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பொருள்:
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது
பழமொழி :
Practice yourself what you preach.
நீ போதிப்பதை நீயே பயிற்சி செய்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நமது பேச்சும் நடத்தையும் நமது வாழ்க்கை வயலில் நாம் விதைக்கும் விதைகள்.
2. நல்ல விதைகள் நல்ல பலனைத் தரும். எனவே நல்ல விதைகளையே விதைப்பேன்
பொன்மொழி :
எதையும் பிரதிபலிக்காமல்
படித்துக் கொண்டே இருப்பது
என்பது.. செரிமானம் இல்லாமல்
சாப்பிட்டுக் கொண்டே
இருப்பதை போன்றது..!
பொது அறிவு :
1.Epigraphy என்பது எதைப் பற்றியது ?
கல்வெட்டுகள் .
2.எந்த விலங்கு மிகவும் அதிகமான சத்தம் எழுப்புகிறது ?
நீலத்திமிங்கலம்.
English words & meanings :
tran·quil·iz·er - a medicine used to reduce tension. Noun. அமைதி படுத்தும் மருந்து. பெயரச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளது. இவற்றை உணவில் சேர்ப்பதால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும். மேலும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.
நீதிக்கதை
கடவுளை குழப்பிய பக்தர்
ஒரு ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார்.
அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர்.
இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார்.
கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் என்று அந்தச் முனிவர் கூறினார்.
மன்னார்சாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார்.
பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கடவுள் கேட்டார்.
தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார், அதான் என்றார் மன்னார்சாமி.
என்ன வரம் வேண்டும், கேள் என்றார் கடவுள்.
அதான் கேட்டேனே வரம், அதை கொடு என்றார் மன்னார்சாமி.
இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்..... ! அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும்.
என்ன செய்யலாம்? - கடவுள் யோசித்தார்.
பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன். பெற்றுக் கொள்... போ!
அய்யய்யயோ... நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே!
அதான் என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! - எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்.
இன்றைய செய்திகள் - 17.08.22
* மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
* தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* பாடத்திட்ட பாரபட்சம் இல்லாமல் அனைத்து பாடத்திட்ட பள்ளிகளிலும் 2 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் தரக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
* 2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
* உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ராணுவத்திடம் ஒப்படைப்பு.
* அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்டு; பிபா நடவடிக்கை.
* ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.
Today's Headlines
* Tamilnadu Transport decided to issue tickets by Electronics and money less transaction method.
* Chennai Metrology Department predicted that there may be heavy rains in 5 districts of TN.
* Upto 2nd standard the students should not be given any HW regardless of their syllabus.
* The ranking for engineering was issued for the year 2022 by Higher Education Minister Ponmudi and also he said Special division selection including Sports persons counselling will start from 20th onwards.
* The weapons made inside India itself was handed over to Army.
* The All India Football Federation was suspended by FIFA.
* For Asian Cup cricket tournament the Afghanistan Team was declared
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment