அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ் - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/08/2022

அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ்

Action-to-fill-over-10,000-vacancies-in-government-schools---Anbil-Mahesh

தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் மூவாயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார்.


பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதுவொரு வழக்கமான கூட்டம் தான். மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மரத்தடியில் நடைபெறும் வகுப்பறைகளுக்கு கட்டடங்கள் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்,நிதித் துறை அமைச்சரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஆசிரியர் நியமனங்கள் குறித்து பேசிய அவர், " LKG மற்றும் UKG வகுப்புகளுக்குத் தேவைப்படும் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்வது குறித்தும், தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்தார்.


கல்வித் தொலைக்காட்சி சர்ச்சைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன்பூபதியின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியான தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்ந்தெடுக்கபட்டவரின் பின்புலன் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்வர் அலுவகத்திடம் ஒப்புதல் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.


அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459