பொது சுகாதார அவசர நிலை\"! உலகெங்கும் அதிகரிக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு! WHO முக்கிய அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/07/2022

பொது சுகாதார அவசர நிலை\"! உலகெங்கும் அதிகரிக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு! WHO முக்கிய அறிவிப்பு


 உலகெங்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.கொரோனா பாதிப்பே இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உலக நாடுகள் மெல்ல நீக்கி வருகிறது. பொதுமக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் என்ற நோய்ப் பாதிப்பு பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மங்கி பாக்ஸ் புதுவித நோய் இல்லை. ஆப்பிரிக்காவில் இந்த வகை நோய் காணப்படும் என்றாலும் கூட ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த வைரஸ் இந்தளவுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் பல்வேறு நாடுகளில் 300க்கும் மேற்பட்டோருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் கூட கேரளாவில் மூன்று பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதியாகி உள்ளது.இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் பாதிப்பைச் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. உலகெங்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.முன்னதாக கொரோனா வைரசை பெருந்தொற்றாக அறிவிக்கும் முன்பும், அதை பொதுச் சுகாதார அவசர நிலையாகவே உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459