ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ.,முதல் கட்ட நுழைவுத் தேர்வு, கடந்த ஜூன் 23 முதல் 29 வரை நடந்தது. இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு, வரும் 21 முதல் 30 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தேர்வு வரும் 25ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6.29 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உட்பட 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான 'ஹால் டிக்கெட்'டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, என்.டி.ஏ., தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment