ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் விதிமுறைகள் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/07/2022

ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் விதிமுறைகள் அறிவிப்பு.

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட இடமாறுதலுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான இடமாறுதல் கவுன்சிலிங், வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான விதிமுறைகளை, முதன்மை கல்வி அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.

ஒன்றிய கவுன்சிலிங்கில் விருப்ப மாறுதல் பெற்றவர்களுக்கு, மாவட்ட மாறுதலில் பங்கேற்க அனுமதி இல்லை. உபரி ஆசிரியர்களாக இருந்து பணி நிரவலில் மாற்றப்பட்டவர்கள் மற்றும் எல்.கே.ஜி., வகுப்புகளில் இருந்து மாற்றப்பட்ட ஆசிரியர்கள், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.வரும், 5ம் தேதி இறுதி செய்யப்பட்ட முன்னுரிமை பட்டியலின்படி மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படும். 

அலகு விட்டு மாறுதலில் சென்றவர்கள், இந்த கவுன்சிலிங்கில் இடம் பெறக் கூடாது. மலைப் பகுதிக்கு மாறுதல் பெற்றவர்கள், தற்போது இடமாறுதலுக்கு தேர்வு செய்யும் இடத்தில், ஓராண்டு மலைப் பணியை முடித்த பிறகே சேர முடியும். அதுவரை, அந்த இடம் காலியிடமாக வைக்கப்படும்.காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே கவுன்சிலிங் நடக்கும். முதல் நாள் முடிவடையாத கவுன்சிலிங், மறுநாள் காலை 9:00 மணிக்கு துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459