தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்றும் , அதே கருத்தினை வலியுறுத்தி சிறப்பு பணி அலுவலர் அவர்களாலும் அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment