சபாஷ்! கேலி, கிண்டல்களை உடைத்தெறிந்த பார்வையற்ற பெண்! சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம்! சாதித்த மாணவி - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/07/2022

சபாஷ்! கேலி, கிண்டல்களை உடைத்தெறிந்த பார்வையற்ற பெண்! சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம்! சாதித்த மாணவி


கேரள மாநிலத்தைச் சேர்ந்த கண் பார்வையற்ற மாணவி, அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் +2 தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ-யின் 10 மற்றும் +2 பொதுத் தேர்வு முடிவுகள் ஒன்றாகவே வெளியிடப்பட்டது.இந்தத் தேர்வில் சோதனைகளை உடைத்தெறிந்து பல மாணவ - மாணவிகள் சாதனைகளைப் படைத்துள்ளனர். அப்படித்தான் கேரளாவில் ஹன்னா ஆலிஸ் சைமன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சி.. பிரதமர் பெயரை ஏன் கூறவில்லை..மவுனமாக வெளியேறிய பாஜகவினர்!கண் பார்வை இல்லைகேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ஹன்னா ஆலிஸ் சைமன். மைக்ரோப்தால்மியா () என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹன்னா ஆலிஸ், சிறு வயதிலேயே கண் பார்வையை இழந்துவிட்டார். இதனால் சிறு வயதில் பலரும் அவரை கிண்டல் செய்துள்ளனர். இருப்பினும், அதையெல்லாம் துச்சமென நினைத்து சாதனை படைத்துள்ளார் ஹன்னா ஆலிஸ்.முதலிடம்சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்களைப் பெற்று மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளார். இது பலருக்கு ஊக்கம் தருவதாகவே அமைந்துள்ளது. இவர் பள்ளிப் படிப்பைத் தாண்டியும் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் இருக்கிறார். மேலும், யூடியூபிலும் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையிலான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.


பூரிக்கும் ஹன்னா ஆலிஸ்


எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் ஹன்னா ஆலிஸ், அத்துடன் நின்றுவிடவில்லை. பல திறமைகள் கொண்ட இவர் கடந்த ஜூலை 15இல் ஆறு இளம் பெண்களைப் பற்றிய ஆறு சிறுகதைத் தொகுப்பை வெல்கம் ஹோம்' என்ற புத்தகமாக வெளியிட்டார். தன்னால் விரும்பிய அனைத்தையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை முதலில் அளித்ததே எனது பெற்றோர்தான் என்று பூரிக்கிறார் ஹன்னா ஆலிஸ்!


பெற்றோர்


இது தொடர்பாக ஹன்னா ஆலிஸ் மேலும் கூறுகையில், "எனக்குப் பெரிதும் உத்வேகம் அளிப்பது எனது பெற்றோர் தான். அவர்கள் என்னை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்காமல் சாதாரண பள்ளியில் சேர்த்தார்கள். மேற்படிப்பின் போத, எவ்வித சிரமத்தையும் நான் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் இந்த முடிவை எடுத்தனர். இங்கு என்னால் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது. இது எனக்கு பெரும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. நான் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை.கிண்டல்பள்ளியில் பலரும் என்னைக் கிண்டல் செய்தனர். சிறு வயது முதலே நான் பள்ளியில் தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. +2 படிக்கும் போதும் அதே நிலைதான். நான் என் வாழ்க்கையில் முன்னேறினாலும், இதுபோன்ற சவால்களை நான் சந்திக்க நேரிடும் என்பது எனக்குத் தெரியும். எனவே சிறு வயதில் இருந்தே அதை எதிர் கொண்டது வாழ்க்கையில் பெரிய சவால்களை எதிர்கொள்ள என்னை வலிமையாக்கியது.


வித்தியாசமாக நடத்தவில்லை


படிப்பு விஷயத்தில் என்னைப் பெற்றோர் வித்தியாசமாக நடத்தவில்லை. எனது பெற்றோர் என்னைச் சாதாரணமாகவே பார்த்தார்கள். என்னுடன் பிறந்த இருவரை எப்படி நடத்தினார்களோ, அதேபோலத்தான் என்னையும் நடத்தினார்கள். அவர்களுக்கு நாங்கள் மூன்று பேரும் சமமானவர்கள். என்னிடம் அவர்கள் ஒருபோதும் வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை. மற்ற குழந்தைகளைப் போல என்னாலும் அனைத்தையும் செய்ய முடியும் என்றே அவர்கள் ஊக்குவித்தனர்.


அம்மாவுக்கு நன்றி


மற்ற குழந்தைகளைப் போல மைதானத்தில் ஓட வேண்டும் என்றால், அவர்களும் என் கையை பிடித்துக் கொண்டு ஓடி வருவார்கள். இப்படி அனைத்து விதத்திலும் அவர்கள் என்னை ஊக்குவித்தார்கள். குறிப்பாக எல்லா சூழ்நிலைகளிலும் எனது தாயார் எனக்குப் பக்கபலமாக இருந்தார். அவர் மட்டும் இல்லையென்றால் என்னை இதைச் செய்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை" என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459