செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியதால் திட்டிய தாய்- 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! - ஆசிரியர் மலர்

Latest

 




22/07/2022

செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியதால் திட்டிய தாய்- 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 


ஸ்ரீபெரும்புதூரில் தாய் திட்டியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் தாய் திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்வம் பெரும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் என்பவருக்கும், பானு என்பவருக்கும் திருமணமான சில வருடங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களிலே கணேஷ் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, கணேஷின் மனைவி பானு பெண் குழந்தையை தனியாக வளர்த்து வந்துள்ளார். திருக்கழுக்குன்றத்தில் வசித்து வந்த பானு, கணவர் இறந்த பின்னர் தனது தாய் வீடான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், திருமங்கை ஆழ்வார் பகுதியில் தனது மகளுடன் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். பானு ஆயக்குளத்தூர் அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தனியாக மகளை வளர்த்து வரும் பானு, மகள் நன்றாக படிக்கவில்லை என அடிக்கடி திட்டி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாலை வீட்டு மாடியில் உள்ள அறையில் மகள் செல்போன் மூலம் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட தாய் பானு, தனது மகளை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த மாணவி, வீட்டின் கழிவறைக்கு சென்று உள் பக்கமாக தாழிட்டு தான் அணிந்திருந்த துப்பட்டாவால் தூக்கிலிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக கழிவறைக்கு சென்ற மகள் வெளியே வரதாதால் சந்தேகமடைந்த தாய் பானு, பதற்றத்துடன் கழிவறையின் கதவை உடைத்து பார்த்தப்போது, மகள் தூக்கில் தொங்கியபடி மயக்க நிலையில் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.பின்னர் மகளை, பானு மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றப்போது, மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே பரிதாபமாக இறந்து விட்டதாக தாய் பானுவிடம் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், உயிரிழந்த மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தாய் திட்டியதால் மனம் உடைந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்த கொண்ட சம்பவம், ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459