நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதுவோர், கடைசி நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் நாளை 7,689 மையங்களில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 22 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர்.9.30 மணிக்கு தேர்வு தொடங்கும் என்றாலும், 8.30 மணிக்கே தேர்வு அறைக்குச் சென்று விட வேண்டும், 9 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரூ.56,000 முதல் ரூ.2 லட்சம் வரை ஊதியம்!குரூப் 4 தேர்வுதமிழக அரசு துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு நாளை நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, 12.67 லட்சம் பெண்கள், 9.35 லட்சம் ஆண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் குரூப் 4 தேர்வு நாளை நடக்கிறது.
9 மணி வரை மட்டுமே
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு காலை 9:30 மணிக்கு துவங்கி 12:30 மணிக்கு முடிவடையும். 8.30க்கே தேர்வு மையத்திற்குள் சென்று விட வேண்டும். 9 மணிக்குதாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். அதற்குப் பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.கட்டாயம் கொண்டு செல்ல வேண்டியவைதேர்வர்கள் ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். முகக்கவசம் அணிந்து செல்வதும் கட்டாயம். மேலும், பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகலையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வு முறை
10ஆம் வகுப்பு தரத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறும். அதில், கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம்பெறும்.பொது அறிவு பிரிவில் 75, திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என, 150 மதிப்பெண்களுக்கு, 100 கேள்விகள் இடம் பெறும். மொத்தமாக குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். காலிப் பணியிடங்களைப் பொறுத்து முதன்மை இடங்களைப் பெறும் தேர்வர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைமுறைகள்
தேர்வில் விடைகளை குறிப்பிட, கருப்பு நிற பால் பாய்ன்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும்,தாளில் ஒரு கட்டத்தைத் தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களைத் தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது எனவும், விடை தெரியாத கேள்விக்குதாளில் உள்ளஎன்கிற கட்டத்தில் ஷேட் செய்ய வேண்டும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இரண்டு இடங்களில் கையெழுத்து
தேர்வர்கள் விடை குறிக்கவேண்டியதாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். தங்களுடைய கையெழுத்தைதாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும். இடதுகை பெருவிரல் ரேகையைதாளில் தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும்.
சிறப்பு ஏற்பாடுகள்
தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment