ஜூலை 21, 22ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக இன்று மீனவர்கள் கடலுள்ள செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 20ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூரில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment