இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அவரவர் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உயர்கல்வித் துறையால் அமைக்கப்பட்டுள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்திருந்த நிலையில், அறிவிப்பு வெளியான நாள் முதல் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர்.
அதன்படி, இதுவரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 969 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 564 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment