விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பிளஸ் 2 மாணவி பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவைச் சேர்ந்தவரின் 17 வயது மகள். இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை இறுதிச் சடங்கு நடந்தது. தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீஸார் விசாரித்ததில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் அவர் கூறுகையில், கணக்கு தேர்வை நான் சரியாக எழுதவில்லை. தமிழ் தேர்வை நான் சரியாக எழுதவில்லை. நான் கலெக்டராக வேண்டும் என என் அப்பா, அம்மா விரும்புகிறார்கள். ஆனால் என்னால் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியாது.
கல்லூரி
இதனால் என்னை கல்லூரியில் சேர்த்துவிடாமல் என் படிப்பை பிளஸ் 2 வுடன் நிறுத்திவிட்டு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்துவிடுவர். பெற்றோர் என்னை மன்னிக்கவும். நான் கடவுளிடம் செல்கிறேன் . என் உடலை பார்க்க என்னுடன் படித்த நண்பர்கள் வந்தால் அவர்களை அனுமதிக்கவும்.கடிதம் ஏன்நான் இந்த கடிதத்தை ஏன் எழுதுகிறேன் என்றால் நான் எதற்காக இறந்தேன் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என அந்த கடிதத்தில் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். அண்மையில் கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம், விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவி தற்கொலை என தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சினை
மாணவர்கள் எந்த பிரச்சினை என்றாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமே தவிர தவறான முடிவை எடுக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. அது போல் பள்ளிகளிலும் கவுன்சிலிங் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்
No comments:
Post a Comment