Digital Content Developer, Graphic Artist பணியிடங்களை நிரப்ப தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
நிறுவனம் | NCERT |
பணியின் பெயர் | Digital Content Developer, Graphic Artist |
பணியிடங்கள் | 04 |
தேர்வு செயல் முறை | Interview |
நேர்காணல் தேதி | 01.08.2022 |
NCERT காலிப்பணியிடங்கள்:
- Digital Content Developer – 2 பணியிடங்கள்
- Graphic Artist – 2 பணியிடங்கள் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மத்திய அரசு வேலைக்கான கல்வித் தகுதி:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BCA, B.Sc, BFA, M.Sc, MCA, MFA படித்திருக்க வேண்டும்.
NCERT தேர்வு செயல் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது ஆகஸ்ட் 1 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
NCERT மாத சம்பளம்:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.29,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
NCERT விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு, 01.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment