அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும்.
அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 26ஆம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு,அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் ,விடுமுறை அறிவிப்பு என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment