தமிழகத்தில் நடந்த குரூப் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா முதலிடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குரூப் 1 பிரிவில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு கடந்த 2020 ஜனவரியில் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வு மூலம் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்பட 66 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியானது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பபடும் நிலையில் 2021 ஜனவரி 3ல் தேர்வு நடந்து முடிந்தது. 2021 டிசம்பர் 14ல் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வானவர்களுக்கு அடுத்தக்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் முதன்மை தேர்வு நடந்தது. மொத்தம் 3,800 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த தேர்வானது சென்னையில் 37 மையங்களில் நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 133 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
சென்னை பாரிமுனை பஸ் நிலையம் அருகே உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலக வளாகத்தில் கடந்த 13ந் தேதி முதல் இன்று வரை நடந்தது. இதையடுத்து இன்று மாலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா முதலிடம் பிடித்தார். கூடுதல் தகவல்களை tnpsc.gov.in இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment