தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடுதல் - சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த அரசு உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/07/2022

தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடுதல் - சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த அரசு உத்தரவு!

தமிழ்நாடு நாள் சூலை 18 விழா கொண்டாடுதல் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்ற 2 வது ஆலோசனைக் கூட்டத்தின் ( 4.7.2022 ) நடவடிக்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான முக்கிய சுவரொட்டிகள் தயார் செய்து அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்துதல் , சுவரொட்டிகள் தயார் செய்து கொடுக்கப்படும் எனவும் , சுவரொட்டிகளை அச்சிடும் பணி பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும் என செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ( நகல் இணைக்கப்பட்டுள்ளது ) சுவரொட்டிகள் தொடர்பான soft copy செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரிடமிருந்து தற்போது பெறப்பட்டுள்ளது.


அதனை அனுப்பப்படுகிறது . ( நகல் அவ்வாறு பெறப்பட்ட தமிழ்நாடு நாள் ( சூலை 18 ) கொண்டாடுவதற்கான soft copy- களை சுவரொட்டிகளாக தயார் செய்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்து காட்சிப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசிற்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459