பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2022 - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/07/2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2022

 

_20180701_211806


  திருக்குறள் :


பால்:      பொருட்பால்


இயல்:     குடியியல்


அதிகாரம்: சான்றாண்மை


குறள்:     983 


அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்.


பொருள்: அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.


பழமொழி :

constant dripping wears away the stone.


எறும்பு ஊரக் கல்லும் தேயும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உளி படாத கல் சிலை ஆவதில்லை. அது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.


2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்


பொன்மொழி :


நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை


என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.


நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.


- புத்தர்


பொது அறிவு :


1.அயோடின் குறைவால் உடலில் ஏற்படும் நோய் எது? 


முன் கழுத்து கழலை. 


2 .முடக்கு வாதம் எதை பாதிக்கிறது ?


நரம்புகள்.


English words & meanings :


Timberline - the altitude above sea level at which timber ceases to grow. Noun. கடல் மட்டத்திற்கு மேல் உள்ள இடம் இங்கு மரங்கள் வளராது. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


மழைக்கால ஆரோக்கியம் 


வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது வயிற்று வலி மற்றும் பிற இரைப்பை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


குளிர் பானங்கள் மற்றும் கார்பனேட்டட் பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

கசாயம், மூலிகை தேநீர், சூப்கள் மற்றும் பிற ஆரோக்கியமான காய்கறி மற்றும் பழச்சாறுகள் (சர்க்கரை சேர்க்காமல்), மோர் போன்றவற்றை உட்கொள்வது உடலின் செரிமானத்தை மேம்படுத்த உதவும். நச்சுத்தன்மையை நீக்கி, நோய்களுக்கு எதிராக நோய் போராட எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

NMMS Q 22: 


ஒரு நாடாச் சுருளின் நீளம் 18 3/4 மீ. ஆகும். 4 முழுச் சுருள்கள் மற்றும் ஒரு சுருளில் மூன்றில் ஒரு பகுதியின் மொத்த நீளம் என்ன? 


விடை: 80 1/4 மீ


ஜூலை 12 - இன்று


மலாலா தினம்  

Malala_Yousafzai_at_Girl_Summit_2014

மலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். 2013ஆம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர்.

நீதிக்கதை


வியாபாரியின் கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 


ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 


மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 


அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 


அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 


குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 


நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 


குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 


நீதி :

அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.


இன்றைய செய்திகள் - 12.07.22


⚓எச்.சி.எல் நிறுவனம் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


⚓புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மத்திய அரசின் ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு, தகுதியான பள்ளி மாணவர்களின் பெயரை செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


⚓காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 8010 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


⚓வரும் 2023-ல் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை இந்தியா முந்தும் என ஐ.நா அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 36-வது உலக மக்கள்தொகை தினமான நேற்று இதனை தெரிவித்துள்ளது.


⚓உக்ரைனின் கார்கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


⚓கோத்தகிரியில் நடைபெற்ற மண்டல கால்பந்து இறுதிப்போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


⚓உலக விளையாட்டு வில்வித்தை: இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை.


⚓அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.


Today's Headlines


 ⚓It has been informed that students who have completed Plus 2 can apply to participate in the employment training course organized by HCL.


⚓ It has been announced to register the names of eligible school students for the central government's 'Inspire' award for new scientific inventions by September 30.


⚓ While it is raining in the Cauvery catchment area, the water inflow to Mettur Dam has increased to 8010 cubic feet, and the water release for Cauvery Delta irrigation has been increased to 15 thousand cubic feet.


A UN report has predicted that India will surpass China in the list of the world's most populous countries in 2023.  This was announced yesterday on the 36th World Population Day.


 ⚓More than 15 people were killed in a Russian attack on an apartment complex in Kharkiv, Ukraine.


⚓ In the regional football finals held in Kothagiri, the Chennai team won the champion title.


 ⚓World Games Archery: Indian pair set a record with a bronze medal


⚓ ODI vs Ireland: Thriller win by 1 wicket for New Zealand.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459