கணினி வழித் தேர்வுகள் ( CBT ) 08.12.2021 முதல் 13.12.2021 வரை நடத்தப்பட்டு , தேர்வர்களின் மதிப்பெண்கள் 08.03.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 11.03.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் , பணிநாடுநர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்களை / ஆவணங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 11.03.2022 முதல் 01.04.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப்பிரிவுகளில் கீழ்க்காணும் 5 பாடங்களுக்கு 1 : 2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புக் கடிதம் , ஆளறிச் சான்றிதழ் படிவம் , சுயவிவரப்படிவம் மற்றும் தமிழ்வழிச் சான்றிதழ் ( PSTM Certificate ) ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். தங்களது அழைப்புக் கடிதம் , ஆளறிச் சான்றிதழ் படிவம் , சுயவிவரப்படிவம் மற்றும் தமிழ்வழிச் சான்றிதழ் ( PSTM Certificate ) ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய URL Link (
https://forms.gle/jHNCd19uc3mcLw6p9 ) வழியாக தெரிவிக்கலாம். பிற வழி கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அனைத்து விவரங்களும் வெளிப்படையாக இணையதளத்தின் வழியாகவும் , செய்திக் குறிப்பின் வாயிலாகவும் தெரிவிக்கப்படும் என பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment