School Morning Prayer Activities - 29.06.2022 - ஆசிரியர் மலர்

Latest

 




29/06/2022

School Morning Prayer Activities - 29.06.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2022
திருக்குறள் :



பால் : பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம் :மானம் 

குறள் - 970 

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு. 



பொருள் - தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.



பழமொழி :

Bare words buy no barely.

வெறும் கையால் முழம் போட முடியுமா?



இரண்டொழுக்க பண்புகள் :



1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.



 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.



பொன்மொழி :



அமைதியை விட உயர்வான சந்தோசம்இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.- புத்தர்



பொது அறிவு :



1. கரையான் நாள் ஒன்றுக்கு எத்தனை முட்டைகள் இடும்? 



30,000 



2. கப்பல் மிதக்கும் தத்துவம் என்ன? 



ஆர்க்கிமிடிஸ் தத்துவம்



English words & meanings :



liability - the state of being responsible, noun. ஒன்றுக்குப் பொறுப்பேற்கும் தன்மை. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :



கோடைகாலங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

NMMS Q 13 : 



மஞ்சு 29.2.1984 இல் பிறந்துள்ளார் எனில் அவர் 2020 வரை எத்தனை பிறந்த நாட்களை கொண்டாடியிருப்பார்? 



விடை : 9

நீதிக்கதை



அன்னையின் வளர்ப்பு



நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெயிலில் காட்டினார்.



பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல்படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார். ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். 



ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர். சி. வி இராமன் ஆனார்.



இன்றைய செய்திகள் - 29.06.22



* நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.



* இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு ஒரே நாளில் 45 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 17,073 ஆக பதிவாகியுள்ளது.

* கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடபிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் அடுத்த மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

* அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இனி விரும்பிய பாடங்களை தங்களின் விருப்ப பாடமாக எடுத்துப் படிக்கலாம்.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மனும் இங்கிலாந்து அணிக்காக உலகோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

* விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

* அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 208 கி. மீ வேகத்தில் பந்து வீசி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459