மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு பேஸ்புக், அமேசான், கூகுள் ஆகிய நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வேலை கிடைத்துள்ளது. இதில் அவர் எந்த நிறுவனத்தை கடைசியில் தேர்வு செய்தார் என்பதுதான் ட்விஸ்டே!இந்தியர்களுக்கு இப்போது சர்வதேச நிறுவனங்களில் அதிகம் வேலை கிடைக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியர் பரக் அக்ரவால்தான் இருக்கிறார்.அதேபோல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நடெல்லா இருக்கிறார் .முக்கிய பொறுப்புகள்இது மட்டுமின்றி உலகின் இன்னும் பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் மூத்த பொறுப்புகளில் வகித்து வருகிறார்கள். மூத்த பொறுப்புகள் மட்டுமின்றி பொறியாளர்கள், கோடிங் எழுதுதல் போன்ற பல பொறுப்புகளில் இந்தியர்கள்தான் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில்தான் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலை.யில் படிக்கும் பிஸாக் மோண்டல் என்ற மாணவருக்கு பேஸ்புக், கூகுள், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஒரே நேரத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.மூன்றிலும் தேர்வுமூன்று நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்து இருந்தவருக்கு மூன்று நிறுவனங்களில் இருந்தும் இன்டர்வியூ வந்து, மூன்றிலும் அவர் தேர்வாகி இருக்கிறார். பேஸ்புக், அமேசான், கூகுள் மூன்றிலும் தேர்வானவர்.. கடைசியில் பேஸ்புக் நிறுவனத்தில் கிடைத்த வேலையை இவர் தேர்வு செய்துள்ளார். பேஸ்புக்கில் அதிக வருமானம் கிடைத்த காரணத்தால் அந்த நிறுவனத்தை இவர் தேர்வு செய்துள்ளார்.
பேஸ்புக் வேலை
இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள அவர், நான் பேஸ்புக்கில் இணைய முடிவு செய்துள்ளேன். செப்டம்பர் மாதம் அந்த பணியில் சேர முடிவு செய்துள்ளேன், பேஸ்புக்கில் அதிக வருமானம் தருவதாக கூறிய நிலையில் அதை தேர்வு செய்தேன். இதற்காக செப்டம்பரில் லண்டன் செல்ல இருக்கிறேன். கடந்த வாரம் செவ்வாய் கிழமை எனக்கு இந்த அறிவிப்பு வந்தது. கொரோனா காலத்தில் நான் நிறைய இன்டர்ன்ஷிப் செய்தேன்.
திறமை
பல துறைகளில் இதன் மூலம் திறமைகளை பெற்றேன். பல பெரிய நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வேலை பார்த்தேன். இதன் மூலம் பல வேலைவாய்ப்புகள் குறித்து எனக்கு தகவல் வந்தது.
நிறையகிடைத்தது.
இதனால் எனக்கு புதிய அனுபவங்கள் கிடைத்தன. இதனால் எளிதாக எனக்கு இன்டர்வியூவில் சிறப்பாக பங்கேற்கும் திறன் கிடைத்தது, என்று குறிப்பிட்டுள்ளார்.லண்டன் செல்கிறார்பிஸாக் மோண்டலின் தாயார் ஷிபானி ஒரு அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். இருந்தாலும் தனது திறமை மூலம் இவர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். சரி சரி.. இவருக்கு சம்பளம் எவ்வளவு பாஸ் என்று கேட்கிறீர்களா.. பேஸ்புக் நிறுவனம் இவருக்கு 1.8 கோடி ரூபாய் வருட வருமானம் தருவதாக அறிவித்துள்ளது. அதாவது மாதம் 15 லட்சம் ரூபாய் வருமானம் இவருக்கு கிடைக்கும்!
No comments:
Post a Comment