தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,159-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 129-ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் 83-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 137 பேர் குணமடைந்துள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என மருத்துவத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment