இந்தியாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி பணியாளர்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆய்வு அறிக்கைகளும் கூட வெளியாகி உள்ளன.இந்தியாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5233 கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதன் மூலம் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 4,31,90,282 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாசிட்டிவ் ரேட் 1.62 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இது 0.91 ஆக இருந்தது.
கொரோனா மரணம்
இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் 28,857 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர், அதிகாரபூர்வமாக இதுவரை கொரோனாவிற்கு 5,24,715 பேர் பலியாகி உள்ளனர். தினசரி கேஸ்கள் 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் 1,242 கேஸ்கள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 2,271 கேஸ்கள் பதிவாகி உள்ளது. பெருநகரங்களில் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளன.மாஸ்க்கேஸ்கள் உயர்ந்த காரணத்தால் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மீண்டும் மாஸ்க் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி பணியாளர்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆய்வு அறிக்கைகளும் கூட வெளியாகி உள்ளன. கடந்த 4 -5 மாதங்களாக கொரோனா கேஸ்கள் குறைந்த காரணத்தால் பணியாளர்கள் பலரை அலுவலகம் வர வைத்தன.அலுவலகம் வர வேண்டும்2 வருடமாக வீட்டில் இருந்து வேலை பார்த்தவர்களை மீண்டும் அலுவலகம் வரும்படி நிறுவனங்கள் உத்தரவிட்டன. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் அலுவலகம் நோக்கி படையெடுத்தனர். இந்த நிலையில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் வொர்க் ஃப்ரம் ஹோம் வருமா என்ற கேள்வி பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறை இப்போதைக்கு மறையாது, அது நீண்ட காலம் தொடரும் என்று பிரபல ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.ரியல் எஸ்டேட்அதன்படி பெருநகரங்களில் இருக்கும் கம்பெனி கட்டிடங்களின் விலை குறைந்து வருகிறது. இதன் மதிப்புகள் வேகமாக சரிந்து வருகிறது. மாறாக குழு வேலை பார்க்கும் கட்டிடங்கள், அதாவதுபகுதிகள் அதிகரித்து வருகின்றன. இதன் அர்த்தம், தனி அலுவலகங்கள் தாங்கள் இருந்த கட்டிடங்களை காலி செய்துவிட்டுகளை நோக்கி செல்கின்றன. பணியாளர்கள் பலர் மீண்டும் அலுவலகம் திரும்பாதது இதற்கு முக்கிய காரணம் என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பணியாளர்கள்பணியாளர்கள் இலகுவான வேலை சூழ்நிலைகளை, வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை, அல்லது தங்கள் நிறுவனத்திலேயே வேலை பார்ப்பதைதான் விரும்புகிறார்கள் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் நாஸ்காம்-பிசிஜி நடத்திய ஆய்வில், 3ல் இரண்டு பங்கு ஐடி ஊழியர்கள், பொது நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை விரும்புவதாக கூறப்பட்டுள்ளது. சரியாக 80 சதவிகித ஐடி, தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, மாதத்தில் சில நாட்கள் மட்டும் அலுவலகம் செல்வதை விரும்புகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.டிஜிட்டல்அதேபோல் டிஜிட்டல் துறைகளில் இருக்கும் 70 சதவிகிதம் பேர் வீட்டில் அல்லது ஆன்சைட்டில் வேலை பார்ப்பதை விரும்புகிறார்கள். 25 சதவிகிதம் பேர் வீட்டை தவிர வேறு எங்கும் வேலை பார்க்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 5 சதவிகிதம் பேர் மட்டுமே அலுவலகம் சென்று எல்லா நாளும் வேலை பார்ப்பதை விரும்புகிறார்கள் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10ல் 7 பெண் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை விரும்புவதாக இன்னொரு அறிக்கை தெரிவித்துள்ளது.முடிவுஇது தொடர்பான முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெரு நிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களிடமும், டீம் லீடர்களிடமும் விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோசாப்ட், அசென்ஞ்சர் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களும் - டீம் லீடரும் கலந்து ஆலோசித்து இதில் முடிவு எடுக்கலாம் என்ற அதிகாரத்தை கொடுத்துள்ளது. அலுவலகம் வர யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. இதனால் அதிகரிக்கும் கொரோனா கேஸ்களுக்கு இடையில் மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம் முழு வீச்சில் தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.?இந்தியாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி பணியாளர்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment