பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணை:அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணினி விருப்ப பாடத்தை படிக்கும் மாணவர்களிடம், தனி கட்டணமாக தலா, 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், கடந்த கல்வி ஆண்டில், 3.27 லட்சம் மாணவர்களிடம், 6.54 கோடி ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக, சட்டசபையில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்தார். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கான தனி கட்டணம், 200 ரூபாய் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், 3.5 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment