பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மாதம் இருமுறை இதழ் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே கல்வி பயின்று வந்தனர்.
தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு குறைந்த கால அளவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் முழுமையாக பாடங்களை படிக்க வசதியாக திட்டமிடப்பட்டு வருகிறது. இதேபோல் மாணவர்களின் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.எண்ணும் எழுத்தும் திட்டம்இதனிடையே 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், அரும்பு, மொட்டு, மலர் என்று மூன்று படிநிலைகளில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் 8வயது உள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறனுடையவர்களாக மாற்ற இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆசிரியர்களுக்கு பயிற்சிஇதுமட்டுமல்லாமல் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆளுமைத்திறன் உட்பட பல்வேறு திறமைகள் மேம்படும். ஆரம்பப் பள்ளிகளை வலுப்படுத்தும்போது, அடுத்தடுத்த கட்டங்களையும் வலுப்படுத்த முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் என்பதால், மாநில கல்விக்கொள்கை பாடத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தற்போது பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாசிப்பை வளப்படுத்த இதழ்இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை இதழ் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ், ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் இதழ் மாதம் இருமுறை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை கருத்துஇதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இந்த திட்டத்திற்காக, தமிழக அரசு சார்பில் நடப்பு கல்வியாண்டில் ரூ.7.15 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த இதழ்களில் தேசிய மற்றும் மாநில செய்திகள் மட்டுமின்றி அந்தந்த மாவட்டச் செய்திகளும், மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இதழ்களை வகுப்பறைச் சூழலும் நயம்பட இணைத்து வாசிப்பை பேரியக்கமாக மாற்றும் வகையில், மாணவர்களின் படைப்புத் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் போட்டிகளும், பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment