மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ல், நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் சார்பில், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் அனுப்புமாறு, மத்திய கல்வி துறையில் இருந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் வந்துள்ளது. இதன்படி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக, nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களில் நிர்வாக பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய, நேற்று முன்தினத்துடன் அவகாசம் முடிந்த நிலையில், இந்த அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆசிரியர்கள், அதிக அளவில் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியான அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த விருதுக்கு சிபாரிசு எதுவுமின்றி, திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தங்களின் திறமை மற்றும் பணியின் மீது நம்பிக்கை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment