தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

 




11/06/2022

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர்

திருச்சி: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கோரிக்கை மாநாடு நேற்று திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் கலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் வரவேற்றார். இதில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவது: அரசு ஊழியர்களில் அதிக பங்கு வகிப்பவர்கள் சத்துணவு ஊழியர்கள் தான். 65 ஆயிரம் சத்துணவு மையங்களில் பணியாற்றும் 2 லட்சம் ஊழியர்கள் இந்த சங்கத்தில் உள்ளனர். நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சியில் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து பேசுவேன். மேலும் உங்கள் கோரிக்கைள் அனைத்தும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459