ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் செஸ் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. செஸ் போட்டிகளை நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-க்குள் புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஜூலை 2 முதல் 8-ம் தேதி வரை செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான 44 வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் எதிர்வரும் 27 ஜுலை 2022 முதல் 10 ஆகஸ்ட் 2022 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி , வட்டார , மாவட்ட மற்றும் மாநில அளவிலும் சதுரங்கப் போட்டிகளை நடத்திடவும் , மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ , மாணவியருக்கு மாநில அளவில் முகாமை நடத்திடவும் , அம்மாணவர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடச் செய்யவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தி மாணவ , மாணவியரைத் தெரிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment