சென்னை: சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் 2021-ம் ஆண்டு டிசம்பர் பருவத்தில் நடைபெற்ற இளநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 17) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment