+2 க்கு பின் என்ன படிக்கலாம் தொடர்... இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா? - ஆசிரியர் மலர்

Latest

 




15/06/2022

+2 க்கு பின் என்ன படிக்கலாம் தொடர்... இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

  எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டால் தான் வேலை கிடைக்கும். இன்ஜினியரிங் இன்று நிறைய பேர் படிக்கிறார்கள். எல்லாருக்கும் சீட்டு கிடைத்து விடுகிறது. அதனால், இன்ஜினியரிங் ஒரு கேலிப் பொருளாக்கப்படுகிறது. பெரும்பாலும் அப்பா அம்மா சொல்லி இன்ஜினியரிங் படிக்கிறவர்கள் தான் அதிகம். ஆனால் வேலைவாய்ப்பை பொருத்தவரை இன்று இன்ஜினியரிங் தான் முதல் இடத்தில் உள்ளது. ஒரு பரோட்டா மாஸ்டருக்கு ஏன் இன்ஜினியரை விட அதிக சம்பளம் வருகிறதென்றால், அவர் ஒரு பதினைந்து வருடம் வேலை பார்த்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டு மாஸ்டர் ஆகியிருப்பார். ஆனால் இன்ஜினியரிங்கில் எல்லா பாடத்திலும் சராசரியாக 50 மதிப்பெண் வைத்துக்கொண்டு வெளியில் வந்து, உடனே எனக்கு வேலை கொடுக்கணும் என்று சொன்னால் சொன்னால் எப்படி? நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சேர வேண்டுமென்றால், அவர்களின் எதிர்பார்ப்பை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு ஏற்றார்போல உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இன்ஜினியரிங் என்பது ஒரு எவர்கிரீன் கோர்ஸ் தான்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459