தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் அறிவிப்பு:
மத்திய மனித வள மேம்பாட்டு துறையின், தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதியுள்ள ஆசிரியர்கள், 'ஆன்லைனில்' விண்ணப்ப பதிவு செய்யலாம். அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், nationalawardsto teachers.education.gov.in/ என்ற இணையதளத்தில், நேரடியாக பதிவு செய்யலாம். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.
விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் 2021 ஏப்ரல் 30 வரையிலான காலத்தில் குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் முறையான பணியில் இருந்திருக்க வேண்டும். அலுவலகங்களில் நிர்வாகப் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது.மத்திய கல்வித் துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment