1. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட் -19 பெருந்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பள்ளி வளாகத்தில் நுழையும் போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும் . எவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அன்னார் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
3. பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
4. அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தினுள் Soap , Hand wash முதலியவை இருப்பதையும் தலைமையாசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.
5. தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் . உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை வகுப்பறைகளில் வேண்டும்.
6. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment