விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முடிந்து விட்டன. இதையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. அரசு தேர்வுத் துறையின், tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண் விபரத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.மேலும், மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் மொபைல் போன் எண்களுக்கு, மதிப்பெண் விபரங்கள், குறுஞ்செய்தி யாகவும் அரசு தேர்வுத் துறையால் அனுப்பப்படும்.
இந்த முறை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை அடைந்தனர். இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆய்வு செய்து, கணிதப் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அது ஏற்கப்பட்டுள்ளதா என்பது, நாளை வெளியாகும் முடிவுகளில் தெரிய வரும்.
No comments:
Post a Comment