பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஜூலை 1 முதல் அபராதத் தொகை ரூ.1,000 ரூபாயாக அதிகரிப்பு..!! - ஆசிரியர் மலர்

Latest

 




03/06/2022

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஜூலை 1 முதல் அபராதத் தொகை ரூ.1,000 ரூபாயாக அதிகரிப்பு..!!

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அபராதத் தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டன. அந்த வகையில், பான் கார்டோடு ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம் கடந்த மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய நேரடி வரிகள் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி வரும் ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்நிலையில் ஜூலை 1ம் தேதியுடன் அபராதம் 1000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பது எப்படி?

1. ஆதார் பான இணைப்புக்கு முதலில்  http://www.incometaxindiaefiling.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

2. அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.

6. இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.

பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என எவ்வாறு பரிசோதிப்பது:  http://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும். இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்புகுறித்த செய்தி வரும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459