01.01.2022 ல் உள்ளவாறு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கான முதுகலை ஆசிரியர்கள் உத்தேச கூடுதல் பெயர்ப் பட்டியல் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
01.01.2022 நிலவரப்படியான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது . 31.05.2022 ல் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க முதுகலை ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேற்படி உத்தேச பெயர்ப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்களின் EMIS ID அவர்கள் பணிபுரியும் பள்ளியின் UDISE CODE ஆகிய விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அனுப்புமாறும் , இந்த பெயர்ப்பட்டியலில் திருத்தம் இருப்பின் அதன் விவரத்தை இவ்வலுவலக டபிள்யு 1 பிரிவிற்கு மின்னஞ்சலில் ( w1dsetn@gmail.com ) 24.05.2022 குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( b ) ன்கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் மற்றும் தண்டனை பெற்று தண்டனை காலம் முடிவடையாத ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்க கூடாது.
இணைப்பு - 1. படிவம்
No comments:
Post a Comment