மொபைல்போனை திருடர்களிடமிருந்து காக்க ஏற்ற செயலி(mobile App) - ஆசிரியர் மலர்

Latest

 




 


31/05/2022

மொபைல்போனை திருடர்களிடமிருந்து காக்க ஏற்ற செயலி(mobile App)

சென்னை: நீண்டதூர ரயில், பேருந்து பயணங்களின்போது பிக்பாக்கெட் ஆசாமிகளிடம் இருந்து மொபைல்போன், பர்ஸ் ஆகியவற்றை காக்க நம்மில் பலர், உடல் சோர்வாக இருந்தும் பல மணிநேரம் தூங்காமல் இருந்திருப்போம். இன்றைய நவநாகரிக உலகில் மொபைல்போன் இல்லாமல் பயணம் செய்ய முடியாது என்கிற சூழல் உருவாகி உள்ளது. ஆண்கள் மேலாடை பாக்கெட், பேண்ட் பாக்கெட்களின் மொபைல்போன்களை வைத்திருப்பர், பெண்கள் பெரும்பாலும் ஹேண்ட்பேக்குகளில் வைப்பர். மொபைல்போன்களை யார் எங்கே வைத்தாலும் அதனை நாசுக்காக உருவி எடுப்பதில் கைதேர்ந்த திருடர்கள் இருக்கவே செய்கின்றனர். கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகள், வணிக வளாகங்களில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காண்பிக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனைத் தடுக்க பாக்கெட் சென்ஸ், இண்ட்ரூடர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் தற்போது பிளே ஸ்டோர்களில் வரத் துவங்கிவிட்டன. இவற்றை பதிவிறக்கம் செய்து அலார்ம் ஒலியைத் தேர்வு செய்தால், பாக்கெட்டில் இருக்கும் மொபைல்போனை யாராது எடுக்க முயன்றால் மொபைல்போன் அசைவை கண்காணிக்கும் பெடோமீட்டர் சென்ஸார் சத்தம் எழுப்பும். இதனால் திருட்டுப் பேர்வழியிடமிருந்து நாம் உஷார் ஆகிவிடலாம். ஆனால் நகர்த்தலை உணரும் பெடோமீட்டர் சென்சார் எந்தளவு துல்லியாமாக வேலை செய்யும் என்ற கேள்வி நாம் அனைவருக்கும் இருக்கும். நாம் ஜாகிங் செல்லும்போது தூரத்தையும், நகர்வையும் கண்காணிக்க ஸ்டெப் டிராக்கர் உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்துவோம். இந்த செயலிகளும் இதே சென்சாரைக் கொண்டே நமது காலடி எண்ணிக்கையை தோராயமாக கணக்கிடுகின்றன. இந்த பெடோமீட்டர் செயலிகளின் சில குறைபாடுகள் இருந்தாலும் இவற்றை நீண்டதூரப் பயணத்தின்போது பயன்படுத்துவது நமது மொபைல்போனை திருடர்களிடம் இருந்து காக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459