கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல இந்திய ரயில்வே கட்டண சலுகை. - ஆசிரியர் மலர்

Latest

 




20/05/2022

கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல இந்திய ரயில்வே கட்டண சலுகை.

பள்ளி மாணவர்களை, டில்லிக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல, இந்திய ரயில்வே கட்டண சலுகை அளிப்பதால், அதை பயன்படுத்தி கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.


இந்திய ரயில்வேயின், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பணிகளை மேற்கொள்ளும், ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், தமிழக பள்ளிக்கல்வி துறை கமிஷனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: நாடு முழுதும் ரயில்வே துறையில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பணிகளை மேற்கொள்ளும் ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான, அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. 



தனியாக ரயில் பெட்டிகள் அல்லது தனி ரயில்கள் பதிவு செய்து, கல்வி ரீதியாக அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு, மாணவர்களை அழைத்து செல்லலாம். இதற்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.இதன்படி, மாணவர்களின் கல்வி சுற்றுலாவுக்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதி, கொரோனா பிரச்னை காரணமாக பயன்படுத்தப்படவில்லை. இதன்படி, 19.20 லட்சம் ரூபாய், நடப்பு ஆண்டில் பள்ளி மாணவர்களின் கல்வி சுற்றுலா பயணங்களுக்கு செலவிடப்படும். இதில், ஜனநாயகத்தின் கோவில் என கருதப்படும், இந்திய பார்லிமென்டை மாணவர்கள் டில்லி சென்று பார்வையிட, தனி ரயிலில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். 



எனவே, விருப்பம் உள்ள பள்ளிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த கடித நகலை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அமுதவல்லி அனுப்பி உள்ளார். அதில், ரயில்வேயின் சலுகைகளை, மாணவர் கல்வி சுற்றுலாவுக்கு பள்ளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459