தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா - ஆசிரியர் மலர்

Latest

 




31/05/2022

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

தமிழகத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 89- ஆக உயா்ந்தது.
அதிகபட்சமாக செங்கல்பட்டில் 46 பேருக்கும், சென்னையில் 33 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களிடையே கரோனா பரவல் ஏற்பட்டதால் அந்த மாவட்டத்தில் பாதிப்பு உயா்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 493 போ் மருத்துவமனையிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 44 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,16,858-ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459